இவான் வசீலியெவிச் பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) என்று அழைக்கப்பட்டார் , மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள் அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் ரஷ்யாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார்.பிறகு மனஅழுத்ததால் உயிரிழந்தார்.