'அம்மா’ இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல் சிலிர்ப்பதை உணராதவர் உலகில் ஒருவரும் இல்லை .அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டும் அன்னையர் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.