அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர் முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முகலாயர் பகுதிகளை விரிவாக்கவும் நிலைநிறுத்தவும் இளம் பேரரசருக்கு பைரம் கான் உதவி புரிந்தார்.இவரைப் பற்றி முதல் பகுதியில் கேட்டு தெரிந்து கொள்வோம்.