விக்கிரமாதித்தன் இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மன்னனாவார். அவரின் திறமையும், ஆற்றலும் எல்லையற்றவை.தீவிர காளி பக்தரான விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிய ஒரு வேதாளத்திடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு இறுதியில் அதை காளி கோவிலுக்கு கொண்டு வந்தார். அந்த வேதாளம் யார்? அது ஏன் முருங்கை மரத்தில் தொங்கியது? அது ஏன் கதை சொல்லிக்கொண்டே இருந்தது?