நம் இந்திய பாரம்பரியத்தில், மகாராஜா விக்கிரமாதித்தன் கதைகளுக்கு தனியிடம் உண்டு. நாடாறு மாதம் காடாறு மாதமாக 2,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்த விக்கிரமாதித்தன், மகாகாளி அருளால் கிடைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி நடத்தினான். பிரச்னைகளுடன் அவனைத் தேடி வருபவர்களுக்கு சாதுர்யமாகவும் புத்திசாலித்தனமாகவும் தீர்ப்புகள் வழங்கினான். இந்தத் தீர்வுகளே, விக்கிரமாதித்த