சிலுவையின் பாரம் மேலே உடலை அழுத்த கற்களும் முற்களும் கீழே கால்களின் பாதங்களைத் துளைக்க உடல் இளைக்க கால்கள் சோர நடை தள்ளாட கீழே விழுகின்றார். இயேசுவின் வாழ்க்கைப்பாதையில் இன்னல்கள் துன்பங்கள், வேதனைகள் பல இருப்பினும் மனம் சோரவில்லை. நம்பிக்கை இழக்கவில்லை எழுகின்றார். ஆனால் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் நாம் என்ன செய்ய முன்வர வேண்டும் என்பதை இப்பதிவில் கேட்போம்.