புனித சனி (Holy Saturday) என்பது கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் பெரிய வெள்ளிக் கிழமைக்கு அடுத்த நாள் ஆகும். இது புனித வாரத்தின் கடைசி நாளாகவும், தவக் காலத்தின் கடைசி நாளாகவும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குத் தயாரிப்பு நாளாகவும் கருதப்படுகிறது. கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடல் அமைதியில் துயில் கொள்ளும் வேளையில் திருச்சபையும் அமைதியோடு காத்திருக்கும். இயேசுவின் இறப்பு துயர நிகழ்வாக இருந்தாலும் அத்துயரமானது மகிழ்ச்சியாக மாறப்போகிறது என்னும் நம்பிக்கையோடு திருச்சபை காத்திருப்பது பெரிய சனியின் பண்பு. திருவழிபாட்டு முறைக்கு ஏற்ப, பெரிய சனி பொழுது சாயும் வேளை வரை நீடிக்கும். அதன் பிறகு பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) தொடங்கும். அதுவே இயேசு சாவினின்று எழுந்த நிகழ்ச்சிக்கு முன்னோடி போல அமைகிறது அதனை இப்பதிவில் கேட்டு தியானிப்போம்.