நோவாவின் பேழையினைக் குறித்த விவரிப்பு விவிலியத்தின் தொடக்க நூலின் காணப்படுகின்றது. தொடக்க நூலுக்கு வெளியே நோவா பற்றிய குறிப்புக்களை எசாயா, எசேக்கியேல், புலம்பல், மத்தேயு நற்செய்தி, லூக்கா நற்செய்தி, 1 பேதுரு, 2 பேதுரு ஆகியவற்றில் காணலாம். திருக்குர்ஆன் உட்பட பிற்காலத்தில் ஆபிரகாமிய சமயங்களின் மரபுக்கதைகளில் இவர் முக்கிய இடம் பெறுகின்றார். ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி, நோவா என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதி பெருந்தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் 'ஆறுதல்' என்பது பொருள். நோவாவின் பேழைக் கதையினை இப்பதிவில் கேட்கலாம்.