இயேசுவுக்கான கொடிய பாதையில் ஆறுதல் அளிப்பவர்களாக அங்கே கல்வாரிப் பாதையில் எருசலேம் பட்டணத்துப் பெண்கள் இயேசுவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஏனெனில் அவர்களின் குழந்தைகளை அரவணைத்திருந்த கரம் பற்றியிருப்பது சிலுவை மரத்தை. அந்த அன்புக் கரத்தை துளைக்க இருப்பது கொடூரமான ஆணிகள். இவையனைத்தையும் கண்டு ஆறுதல் அளிக்க வருகின்றார்கள் அந்த பெண்கள். ஆனால் நமக்கு ஆறுதல் அளிப்பவர் என்ன சொல்லுகிறார் என்பதை இந்நிகழ்ச்சியில் கேட்டு தெரிந்து கொள்வோம்