புதுமைகள் பல செய்த கைகளில், புண்கள் ஆற்றிய கைகளில், புண்ணிய வழிகாட்டிய கைகளில் கொடுமையான கோரமான ஆணிகள் துளைக்க அதனால் இயேசு துடிதுடிக்க வேதனையும் துன்பமும் அடைந்தார். நாம் எத்தனை ஆணிகளால் இன்றும் இயேசுவை அறைந்து கொண்டிருக்கின்றோம். சாதி, மதம், லஞ்சம், ஊழல், பதவி வெறி, பழித்தூற்றல், வரத்தட்டசனை, தீண்டாமை, வறுமை, ஏற்றத்தாழ்வு, என்று எண்ணற்ற ஆணிகளால் இயேசுவை இன்றும் அறைந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.