குழந்தையாக இயேசுவைத் தனது அன்புக் கரங்களில் ஏந்திய அன்னை மரியாள் இன்று வாடி வதங்கி துவண்டு கிடக்கும் அவரது உடலைத் தாங்கி பிடிக்கிறாள். யாரால் இத்தகைய நிலையைத் தாங்கி கொள்ளமுடியும். எத்தனை முறை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தந்தையையும் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தியிருக்கிறோம். நம் வாழ்விற்க்காக தம் மகனைத் தந்து எங்களுக்கு சான்று பகர்ந்த எங்கள் வியாகுல அன்னையைப் பின்பற்றி வாழ வரம் தாரும். ஆமென்.