இயேசுவின் மரித்த உடலுக்கு மரியா தம் மடியில் புகலிடம் அளித்தார். மரியன்னையின் புகலிடம் அடைந்த இயேசுவின் உடல், இப்பொழுது பூமியில் விதைக்கப்படுகிறது. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலன் தரும் என்று கூறிய இயேசு தன்னையே பிறருக்காக அழித்துக்கொண்டார். நாம் நமது சுயநலத்திற்காக மடிய வேண்டும். நம்மையே அழிக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்கு வாழ்வளிக்க முடியும் என்பதனை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்