முகம்மது அலி, ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.