அன்னை என்றாலே அன்பும், அரவணைப்பும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர், அன்னை தெரசா. ஏழை,எளியோருக்கு சேவை செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த அவர், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஆசிரியராக தனது பணியை தொடங்கினார். பின்னர் முழு நேர தொண்டாளராக மாறிய தெரசா, வீட்டில் புறக்கணிக்கப்பட்ட நபர்களுக்கும், தீர்க்க முடியாத நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் விளங்கினார்.